நள்ளிரவில் ஜன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டிருந்த திருடர்கள்! வீட்டார் விழித்துக் கொண்டதால் தப்பி ஓட்டம்…..!

யாழ்.கந்தர்மடம் – மணல்தறை ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டிருந்த திருடனை வீட்டிலிருந்தவாகள் கண்டு கூச்சலிட்டதால் தப்பி ஓடியுள்ளான்.

மணல்தறை ஒழுங்கையில் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஓர் வீட்டில் நேற்று இரவு வீட்டின் யன்னல் கம்பிகளை வளைத்து உட்புகுந்த திருடர்கள் அந்த அறையில் இருந்து ஏனைய அறைகளிற்கு செல்வதற்காக

மற்றுமோர் ஜன்னலை வளைக்க முற்பட்டுள்ளனர். இரண்டாவது யன்னலை வளைக்கும் முயற்சியின்போது ஏற்பட்ட சத்தம் காரணமாக வீட்டார் விழித்து மின் விளக்குகளை ஒளிர விட்டபோது திருடர்கள் ஓடித் தப்பிவிட்டனர்.

இதன் காரணமாக பெரும் களவு தவிர்க்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews