பாதீட்டுக்கு எதிராக வாக்களித்த இரண்டு இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி நீக்கம்….!

யாழ்.காரைநகர் பிரதேசசபையின் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  உறுப்பினர் பரமானந்தம் தவமணி பதவி நீக்கப்பட்டார்.

கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடியும் சமூகநலன் சார்ந்தும் எடுக்கப்பட்ட முடிவான வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பில்

நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு மாறாகச் செயற்பட்டஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி  மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசனும் உடனடியாகக் கட்சியை விட்டு நீக்கப்படுகின்றார்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews