சூடுபிடிக்கும் பிரியந்தவின் படுகொலை விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

இலங்கை பிரஜையான பிரியந்தகுமார, பாகிஸ்தான் சியல்கொட் நகரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 33 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 முக்கிய சந்தேகநபர்களை இன்று கைது செய்ததாக சியால்கோட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரியந்த குமார, டிசம்பர் 3 ஆம் திகதி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்ட 52 சந்தேகநபர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 33  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பிரியந்தகுமார கொலை தொடர்பில் இதுவரை 85 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவதனவின் மாதாந்த சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி வைப்பிலிடுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin