கிளிநொச்சியில் வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு செயற்திட்டம்!

கிளிநொச்சி லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தினால், வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு செயற்திட்டம், இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 7.30 மணியளவில், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முன்பாக இடம்பெற்ற விழிப்புணர்வு செயற்திட்டத்தின் போது, கவனயீர்ப்பில் ஈடுபட்ட குழுவினர், துண்டுபிரசுர வினியோகத்திலும் ஈடுபட்டனர்.
சாரதிகள், மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம், பாதசாரி கடவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், வேக கட்டுப்பாட்டை பேணுதல் உள்ளிட்ட விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

Recommended For You

About the Author: admin