வடக்கில் மின்சாரம் தாக்கி 35 வயது யானை உயிரிழப்பு!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பரப்புக்கடந்தான் கிழக்கு பகுதியில், மின்சாரம் தாக்கியதில், யானை உயிரிழந்துள்ளது.
தோட்ட காணி ஒன்றில், இறந்த நிலையில், காட்டு யானை ஒன்று, இன்று காலை, கிராம மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதனையடுத்து, கிராம மக்கள், உடனடியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதனால், சம்பவ இடத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், உயிரிழந்த யானையை மீட்டனர்.
உயிரிழந்த யானை, சுமார் 35 வயதுடைய பெண் யானை என, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் போது, சம்பவ இடத்திற்கு சென்ற, வடக்கு மாகாண வன ஜீவராசிகள் திணைக்கள மருத்துவ அதிகாரி, உயிரிழந்த யானையை மீட்டு, பரிசோதனைகளை மேற்கொண்டார்.
அதனடிப்படையில், குறித்த யானை, சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்சார இணைப்பில் அகப்பட்டு, மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக, மருத்துவ அதிகாரி குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மன்னார் அடம்பன் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin