கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கி யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த இருவர் மாயம்!

கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கிய இருவர் காயாமல்போயுள்ள நிலையில் கடலில் தத்தளித்த மற்றொருவர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த தூண்டல் தொழிலாளர்கள் மூவர் நேற்று மதியம் ஒரு படகில் பயணித்துள்ளனர்.

மன்னார் பள்ளிமுனை கடல் பகுதியில் இயந்திரம் பழுதானதால் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார்.

கடலில் இறங்கிய வரை கடல் இழுத்துச் சென்றுள்ளது. கடல் இழுத்துச் செல்லும் நபரை காப்பாற்ற இறங்கியவரையும் கடல் இழுத்துச் சென்றுள்ளது.

என தெரிய வந்துள்ளது.படகில் இருந்த ஒருவர் மட்டுமே பள்ளிமுனை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

கடல் இழுத்துச் சென்றவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.சம்பவத்தில் காணாமல் போனவர்கள் பருத்தித்துறையை சேர்ந்த தர்சன்

மற்றும் செந்தூரன் எனவும் உயிர் தப்பியவர் ஜெரோம் என்றும் தெரியவந்துள்ளது. குறித்த பள்ளிமுனை கடல் பகுதியில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட

ஆற்று நீரோட்டங்கள் இருப்பதாகவும் இதில் ஏதாவது ஒரு நீரோட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் என்று மன்னார் கடற்தொழில் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுவரை காணாமல் போன இருவரும் மீட்கப்படவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews