பிள்ளைகளுக்கு பெற்றோர்  சண்டை பிடிப்பது பிள்ளைகளை மோசமாக பாதிக்கும்…….!அரசியல் ஆய்வாளரும், சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம்

பிள்ளைகளுக்கு பெற்றோர்  சண்டை பிடிப்பது பிள்ளைகளை மோசமாக பாதிக்கும் என அரசியல் ஆய்வாளரும், சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் கல்விநிலையில் பின்தங்கிய வடமராட்சியின் அல்வாய் வடக்கு கிராம சேவகர் பிரிவில் கல்வியை முன்னேற்றுவது தொடர்பில் நேற்று அம் மக்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் நாம் செய்வோம் அமைப்பின் இயக்குநர் பொறியியலாளர் திரு ரவிசங்கர்,அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம், மருத்துவர் கதிரேசு பவணந்தி, கிரமா மக்கள்,நலன்விரும்பிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்ட நிகழ்விலறயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது.

வெளியிலே அதிகமான நச்சுக் காற்றுகள் வீசுகின்றன.ஒரு பக்கத்தில் கஞ்சா இருக்கிறது, கசிப்பு இருக்கிறது, இன்னொரு பக்கத்தில் வாள்வெட்டு இருக்கிறது. அந்த நச்சுக் காற்றுக்கள் எங்களது  பிள்ளைகளில் படாது எப்படி பிள்ளைகளை  வளத்தெடுப்பது ஏன்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கம்.

வெளியே இருக்கின்ற நச்சுக்காற்றுக்குள் அகப்படாமல் இந்த சமூகத்திற்க்கு பொருத்தமானவர்களாக, சமூக அக்கறை உடையவர்களாக, பக்குவமாக வளர்தெடுப்பதற்க்காகத்தான் எங்களுடைய கல்வித் திட்டம் அமைகிறது.
பிள்ளைகளை பொறுத்தவரை பிள்ளைகள் பிள்ளைகள்தான், ஒருநாளில் பிள்ளைகள் அரைவாசி நேரம் பெற்றோருடனும் மிகுதி நேரம் ஆசிரியர்களுடனும் இருக்கிறார்கள்.
பிள்ளைகள் எதாவது தவறு செய்தால் பெற்றோரும் ஆசிரியரும்தான் பொறுப்பாளிகள்.
பிள்ளைகளுக்கு நாங்கள் சரியாக வளிகாட்டாமையினாலேயே இந்த நிலமைகள் எல்லாம் ஏற்படுகிறது.
ஆகவே இவற்றை எல்லாம்  எப்படி மாற்றுவது என்பதிலேயே  நாங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
எங்களுடைய பெற்றோர்களில் பலருக்கு பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்பதே தெரியாது. அவர்கள் வந்து தங்களுடைய கோபங்களை எல்லாம் பிள்ளைகள் மீதே காட்டுவது.
பிள்ளைகளை பொறுத்தவரையில் நாங்கள் சாப்பாடு கொடுத்து வளர்த்தால் மட்டும் போதும் என்று நினைக்கின்றோம்.
ஆனால் பிள்ளை ஒரு வலுவான உள ஆரோக்கியத்துடன் வளர்க்கின்ற ஒரு செயற்பாட்டை நாங்கள் செய்வதில்லை.
ஐந்து வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு சூழலில் நடக்கின்ற விடயங்கள் அனைத்தும் அப்படியே அவர்கள் அடிமனதில் பதிந்துவிடும்.
அது பிள்ளையை வாழ்க்கை முழுவதும் வழிநடத்தும்.
சரியாக பிள்ளைகளின் அடிமனதில் பதியவிடவில்லை எனில் அது பிள்ளைகளை மோசமாக வளிநடாத்தும்.
பிள்ளை நடத்தை கெட்டு நடந்தாற்போல நாங்கள் தலையில் கைவைத்து அழுகின்றன நிலமை வரும், அந்த நிலமைதான் இப்போது இருக்கிறது.
அந்த நிலமையை  நாங்கள் மாற்ற வேண்டும்,  பெற்றோர் சந்தோஷமாக இருக்கிற குடும்பங்களில் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள்,
நீங்கள் சண்டை பிடிபடும்போது பிள்ளைகளுக்கு முன்பாக சண்டை பிடிக்காதீர்கள்
உங்களுக்கு சண்டை பிடிபட விருப்பமோ பிள்ளைகளை பாடசாலை அனுப்பியபின் சண்டை பிடியுங்கள்.
பிள்ளைகளுக்கு முன் நீங்கள் சண்டை பிடிப்பது பிள்ளைகளை மோசமாக பாதிக்கும் என்றார்.

Recommended For You

About the Author: admin