கொழும்பில் தமிழர் ஒருவரை அச்சுறுத்திய மர்மநபர் யார்? பொலிஸார் தகவல்.

கொழும்பில் தமிழர் ஒருவரை சினிமா பாணியில் கடத்திச் சென்று கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் பம்பலபிட்டியில் வைத்து தமிழர் ஒருவரை அச்சுறுத்தி பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஏற்கனவே விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருவர் என தெரியவந்துள்ளது. விடுதலையாகுவதற்கு முன்னர் குறித்த நபர் சிறைச்சாலையில் இருந்த கைவிலங்குகளை திருடியுள்ளார். அதனை பயன்படுத்தியே தமிழர் ஒருவரை அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்னர் கிருலப்பனை பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் தொடர்பில் கைது செய்யப்பட்ட போது கைவிலங்குகளை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய சீசீடீவி காணொளி உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews