கிழக்கு மாகாண அழகுக்கலை நிபுணர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு

நாட்டின் தற்போதைய அசாதாரண நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள அழகுக்கலை நிபுணர்களின் தொழில் வாய்ப்பினை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில் நுட்ப முறையிலான அழகுக்கலை தொடர்பான பயிற்சி கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் மரியதாஸ் சியானி ராஜீ ஒழுங்கமைப்பில் நடைபெற்ற பயிற்சி கருத்தரங்கில் வளவாளராக சர்வதேச தர அழகுக்கலை நிபுணர் எம்.ஜெயசந்திரன் கலந்துகொண்டு புதிய தொழில்நுட்ப முறையிலான அழகுக்கலை செய்முறை பயிற்சியினை வழங்கியிருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews