யாழ்.ஆரியகுளத்தை தொடர்ந்து மறவன்குளம் புனரமைப்பு பணிகள் நேற்று ஆரம்பம்..! |

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக நேற்று காலை 10 மணியளவில் யாழ்.மாநகர முதல்வரின் தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் அக்குளத்தின் மாதிரி திட்ட வரைபும் மக்கள் பார்வைக்காக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன், மாநகர பிரதி முதல்வர்  து.ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டி வைத்தனர்.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர். மாநகர சபை உத்தியோகத்தர்கள், அப்பகுதி மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews