குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானப்படை கேப்டன் குறித்து வெளியான விபரம்……!

இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த ஹெலிகாப்டர் தமிழகத்தில் நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த விபத்தில் 13 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் விமானப்படை கேப்டன் ஒருவர் மட்டுமே படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு வெலிங்டனில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், உயிர்தப்பிய விமானப்படை கேப்டன் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கேப்டன் வருண் சிங் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் சௌர்யா சக்கரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். 2020 ஆம் ஆண்டு வானில் அவசர சூழலில் தன்னுடைய தேஜஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது’ என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews