மனைவியின் தலையில் தேங்காயால் அடித்த கணவன்! கணவனின் கழுத்தை அறுத்த மனைவி, கணவன் பலி, மனைவி படுகாயம்.. |

மனைவியின் தலையில் தேங்காயினால் அடித்ததால் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் கழுத்தை வெட்டியதில் கணவன் உயிரிழந்த சம்பவம் நாமுவ – ரணால பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றிருக்கின்றது.

குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த கணவன், மனைவியின் தலையில் தேங்காய் ஒன்றால் அடித்துள்ளார்.இதனால் கோபமடைந்த மனைவி, கையில் வைத்திருந்த கத்தியால் கணவரின் கழுத்தில் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அயலவர்களால் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவரது கணவர் உயிரிழந்துள்ளார். 50 வயதுடைய மொரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தம்பதியினர் கடந்த இரண்டு மாதங்களாக மொரகெட்டிய பிரதேசத்தில் உள்ள வாடகை விடுதி ஒன்றில் வசித்து வந்ததாகவும், இதுவரை சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் 

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews