இந்தியாவை சேர்ந்தவரது சாரதி அனுமதி பத்திரம் வடமராட்சி கிழக்கில் கரை ஒதுங்கியுள்ளது……!

இந்தியாவைச்சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் என்பவருடைய சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று  வடமராட்சிகிழக்கு வத்திராயன் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் அதனை   மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 குறித்த  நபருக்கு என்ன நடந்தது,   சாரதி அனுமதிப்பத்திரம் எப்படி இங்குவந்து கரையோதிங்கியது போன்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 அண்மை நாட்களாக வடமராட்சி,  வடமராட்சிகிழக்குப் பகுதிகளில் 5 சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியிருந்தன. இந் நிலையில் கரையொதுங்கிய சாரதி அனுமதி பத்திரத்தில்  அவருடைய முகவரி காலம்பாடி,
சிதம்பரம்,
Kalampadi po
Chidambaram taluk
Chidambaram cuddalcre tn 606602 என குறிப்பிட பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews