தென்மராட்சியில் கொரோனா தொற்றினால் ஒருவர் மரணம்! ஏற்கனவே குடும்பத்தினர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்.. |

யாழ்.தென்மராட்சி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில் நேற்று காலை திடீர் உடல்நல குறைவுக்குள்ளான முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இறப்பின் பின் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தென்மராட்சியில் இதுவரை 60 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதைாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews