நான் ஒரு இனவாதி அல்ல, ஜனநாயகத்தை விரும்பும் தமிழ் மக்களுடன் பேச விரும்புகிறேன்..! சம்பிக்க ரணவக்க.. |

நான் ஒரு இனவாதி அல்ல. இனவாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்க்கும் ஒருவன் என கூறியிருக்கும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனநாயகத்தை விரும்பும் தமிழ் மக்களுடன் பேசுவதற்கு தாம் விரும்புவதாகவும் கூறியுள்ளார். 

நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்திற்கு மின்சார வசதியை பெற்றுக் கொடுத்தேன்.

மலையக மக்களுடைய குடியிருப்புகளுக்கு மின்சார வசதியை பெற்றுக் கொடுத்தது நான் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும்போதே, நகரசபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்டபோது

கொழும்பு நகருக்குள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வழங்கியபோது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதுவித அசாதாரணமும் செய்யவில்லை. 30 வருட காலமாக இடிபாடுகளுடன் கிடந்த யாழ்.நகரசபை கட்டிடத்தில் கட்டியெழுப்பும் பணிகள் ஆரம்பமானது

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த என் தலைமையில் தான். ஒரு நவீன நகரமாக்கும் திட்டத்தில் தொிவு செய்யப்பட்ட யாழ்.நகரத்தை பூர்த்தி செய்ததும் என் தலைமையில் ஆகும். சிந்தித்துப் பாருங்கள் நான் ஒரு இனவாதியாக இருந்தால்

இதுபோன்ற செயல்களை செய்து இருப்பேனா? நான் ஒரு ஜனாதிபதி ஆவேனோ இல்லையோ நான் ஒரு இனவாதி இல்லை. அதேவேளை மத வாதியும் இல்லை. நிச்சயமாக நான் ஒரு ஜனநாயகவாதி. திறமைசாலிகளை மதிக்கிறவன்.

ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு காலம் இருக்கிறது எல்லோருடனும் கலந்துரையாடி சரியான நேரத்தில் சரியான வேட்பாளரை களமிறக்க படுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews