கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி கொள்ளையிட முயற்சி, கட்டிப்போட்டு கவனித்த மக்கள்….!

யாழ்.நகர்ப்பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருட வந்த ஒருவரை பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள், பின்னர்  பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று (04) மதியம் யாழ்.கைலாசபிள்ளையார் கோவிலின் அருகில் உள்ள சொக்கன் உணவகத்தில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தான் கொண்டு செல்லும் பையில் இரு கத்திகளையும் வைத்து கொண்டு செல்லும் குறித்த நபர், சந்தர்ப்பம் வரும்வேளையில் கத்தியைக் காட்டி மிரட்டி திருடி வந்துள்ளார்.

அதேபோல் நேற்று(04) காலை யாழ்.மாம்பழச் சந்தியில் உள்ள புத்தக கடையொன்றினில் நுழைந்து அங்கு நின்ற பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து திருட முற்பட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் கடைக்குள் ஓடினார்கள்.

அதனைப் பார்த்த திருடன் தப்பியோடியுள்ளார். பின்னர் இதேபோல் சொக்கன் உணவகத்துக்குள்ளும் நுழைந்து திருட முற்பட்டபோது மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த திருடன் எந்த நேரமும் அழுக்கான உடையுடன் யாழ்.நகர் வீதிகளில் நடந்து செல்வதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டது போல் உலாவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews