யாழ்.மாவட்டத்திலுள்ள 3 தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் முயற்சியை சீனா கைவிட்டது ஏன்?

யாழ்.மாவட்டத்தின் 3 தீவுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கும் திட்டத்தை இடைநிறுத்துவதாக சீன துாதுவராலயத்தின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் தொிவிக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கும் திட்டத்தில் 3ம் தரப்பு ஒன்று பாதுகாப்பு விடயத்தில் கரிசனை கொண்டிருப்பதால் இந்த திட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்.மாவட்டத்தில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களில் இந்தச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தைச் சீனா முன்னெடுக்கவிருந்து.

குறித்த திட்டம் தொடர்பாக தமிழ் தரப்புக்கள் கடுமையான எதிர்ப்பினை தொிவித்துவந்ததுடன் இந்தியா கடும் சீற்றமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews