யாழ்.வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் தாதி ஒருவரின் அறைக்குள் புகுந்து துணிகர கொள்ளை! விசாரணைகள் ஆரம்பம்.. |

யாழ்.வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நேற்றய தினம் இரவு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் பெறுமதியான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வைத்தியசாலையில் பணிசெய்யும் தாதியர் ஒருவருடைய அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் வைத்தியசாலையின் பணம் என்பன இவ்வாறு களவாடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக. மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews