மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் துப்புரவு பணி

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை கம்பஹா அத்தனகல்ல 306 பி 2 லயன்ஸ் கழகத்தின் சூழல் சுற்றாடல் பிரிவினரால் காத்தான்குடி நகர சபையின் அனுசரணையுடன் இந்த துப்புரவு பணி இன்று இடம் பெற்றது.

லயன்ஸ் கழகத்தின் இலங்கையை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருப்போம் எனும் திட்டத்தின் கீழ் சமூகங்களிடையே சகவாழ்வையும் ஐக்கியத்தையும் சமதமானத்தையும் ஏற்படுத்தும் பொருட்டு கம்பஹா அத்தனக்கல்ல 306 பி 2 லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகள குழு காத்தான்குடிக்கு வருகை தந்து காத்தான்குடி கடற்கரையை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டதுடன் குப்பைகளை கொட்டும் குப்பைத் தொட்டிகளையும் காத்தான்குடி நகர சபைக்கு கையளித்தனர்.

இதன் போது காத்தான்குடி கடற்கரையோரம் மரம் நடுகையும் இடம் பெற்றது.

இந்த நிகழ்வுகளில் கம்பஹா அத்தனக்கல்ல 306 பி 2 லயன்ஸ் கழகத்தின் ஆளுநர் ஐ.கே.ராஜபக்ச காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் கம்பஹா அத்தனக்கல்ல 306 பி 2 லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews