யாழ்.தென்மராட்சியில் டெங்கு காய்ச்சல் அபாயம்! சுகாதார பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை.. |

யாழ்.தென்மராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புடனும், தமது சுற்றுபுற சூழலை சுத்தமாகவும் வைத்திருக்கவேண்டும். என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர். 

தென்மராட்சி பகுதியில் டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி அதிகரித்துள்ளமை பூச்சியியல் ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டிருக்கின்றது. இதனால் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் அபாயம் எழுந்திருக்கின்றது.

இந்நிலையில் கிராம மட்டத்திலான டெங்கு ஒழிப்பு குழுக்களின் செயற்பாட்டை வலுப்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கவும், நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அழிக்கவும்,

உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சகல கிராமமட்ட உத்தியோகஸ்த்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு மேலும் கூறியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews