விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஐந்து வகையான கிருமி நாசினிகளை தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு இரத்து! |

2014ம் ஆண்டு Glyphosate உள்ளிட்ட ஐந்து வகையான கிருமி நாசினிகள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கிருமிநாசினிகள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.சுமித்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி ஊடாக ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

Glyphosate உள்ளிட்ட 05 வகையான இரசாயனங்கள் அடங்கிய கிருமிநாசனிகள் பயன்பாடு, விற்பனை என்பவற்றுக்கு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி வெளியான வர்த்தமானி மூலம் தடை விதிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews