யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம், பல்கலைகழக நிர்வாகம் ஆகியவற்றுக்கும் தடையுத்தரவு..!

யாழ்.பல்கலைகழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்த தடைவிதிக்ககோரி யாழ்.நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்,செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி நீதிமன்ற தடையுத்தரவில் நவம்பர் 21ம் திகதி தொடக்கம் நவம்பர் 28ம் திகதி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் இறந்த நபர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை,

தற்போது நாட்டில் காணப்படும் கொரோனாத் தொற்றுப் பரவலை கவனத்திற் கொண்டும் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பொது இடத்தில்,பொது எண்ணத்துடன் பொதுமக்களை ஒன்று கூட்டியோ

அல்லது தனிநபர் மூலமோ 15ம் இலக்க குற்றவியல் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு 1979ம் ஆண்டின் நடவடிமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) இன் கீழ் மன்றுக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம்

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews