உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது சிறுவன் மரணம்!

வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது சிறுவன் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உள்ள தமது காணியை குடும்பஸ்தர் உழவு இயந்திரன் மூலம் உழுதபோது தனது இரு பிள்ளைகளையும் உழவு இயந்திரத்தின் இரு மருங்கிலும் இருத்தி விட்டு உழுதுள்ளார். இதன்போது உழவு இயந்திரத்தின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன் உழவு இயந்திரம் உழுதபோது தவறி கீழே விழுந்து உழுதுகொண்டிருந்த கலப்பைக்குள் அகப்பட்டு வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சிறுவனை மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்தபோதும் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே சிறுவன் இறந்துள்ளார்.

வவுனியா, பாலமோட்டையைச் சேர்ந்த க.கனிசன் (வயது – 5) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் வைத்தியசாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews