மட்டக்களப்பு நாவக்கேணி கிராமத்தில் நன்னீர் மீன் அறுவடை நிகழ்வு.

நன்னீர் மீன் அறுவடை நிகழ்வு மட்டக்களப்பு நாவக்கேணி கிராம சேவையாளர் பிரிவில் நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெக் டாட் நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் முன்னெடுத்துள்ள நவீன முறையிலான நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தின் மீன் அறுவடை நிகழ்வு இன்று மட்டக்களப்பு நாவக்கேணி கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் நாவக்கேணி கிராம சேவையாளர் பிரிவில் சேனாதிராஜா நந்தகுமார் என்பவரின் நன்னீர் மீன் பண்ணையில் நடைபெற்ற மீன் அறுவடை நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், எ.சுதர்சன் தென்னை பயிர்ச்செய்கை திட்ட முகாமையாளர் சூரியமூர்த்தி அரிந்திரன், கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்பணி ஜேசுதாசன் உட்பட அரச அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews