யாழில் தீவிரமடையும் நிலைமை! மக்களிடம் அவசர வேண்டுகோள்.

யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்து வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளதுடன், மக்களிடம் அவசர வேண்டுகோளொன்றையும் முன்வைத்துள்ளார்.

அதன்படி, மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை அதிகரித்து செல்வதால் பயணங்கள் மற்றும் இதர செயற்பாடுகளின் போது ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என கோரியுள்ளார்.

மாவட்டத்தின் தற்போதைய கோவிட் தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் தற்பேதைய சூழலில் 634 குடும்பங்கள் கோவிட் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது தற்போது கோவிட் தொற்று அதிகரித்து செல்கிறது.

பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கவேண்டும். சமூக இடைவெளி முகக்கவசம் அணிதல் போன்றவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். தற்போதைய சுழலில் தளர்வு நிலை அறிவிக்கப்பட்டுள்ள போதும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  அவ்வாறு செய்வதன்மூலமே யாழ்ப்பாணத்தில் கோவிட்டை முற்றுமுழுதாக கட்டுப்படுத்தலாம். இது மட்டுமன்றி பயணங்கள் மற்றும் இதர செயற்பாடுகளின்போது ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews