வான் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல முற்பட்ட கேஞ்சாவுடன் இருவர் பொலிசாரால் கைது.

வான் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல முற்பட்ட கேஞ்சாவுடன் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வான் ஒன்றில் மறைத்து எடுத்த செல்லப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியிலிருந்து மட்டக்களப்பிற்கு வான் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட நிலையில் பொலிசாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அறிவியல்நகர் பகுதியில் கிளிநொச்சி குற்ற விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் கருணாரட்ணம் ஜெசிந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வாகனத்தை மறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 10 கிலோ 845 கிராம் எடையுள்ள கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த வாகனத்தையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் சகோதரர்கள் எனவும், ஒருவர் சாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றயவர் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சான்றுபொருட்களுடன், கைது செய்த நபர்களையும் இன்று பொலிசார் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளிற்கான 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்தி விசாரணை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக கிளிநொச்சி பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews