எண்ணை ஆலையானது இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு.

கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டடப்பொருள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட எண்ணை உற்பத்தி நிலையம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த ஆகியோரால் திறந்த வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.

3.5 மில்லியன் நிதியில் அமைக்கப்பட்ட குறித்த கட்டடமானது இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் பச்சிலைப்பள்ளி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் நிர்வகிக்கப்படும் குறித்த எண்ணை ஆலையானது இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த, அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews