அருட்தந்தை சிறில் காமினி மனு தாக்கல்!

குற்றப்புலனாய்வு பிரிவால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதி மன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அண்மையில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்து அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அந்தத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு அண்மையில் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு முன்னிலையாகவில்லை.
அவருக்கு பதிலாக அருட்தந்தையர்கள் மூவர் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகினர்.
இதன்போது குறித்த மூவரும், வாக்குலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினிக்கு ஒரு வாரக் காலம் அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews