யாழில் காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகள் கொட்டும் மழையிலும் போராட்டத்தில்!(வீடிடீயா)

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்  யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐ நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்  குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும். இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை சர்வதேசமே நமக்கு தீர்வை கொடு போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தின்போது புலனாய்வாளர்கள் அவ்விடத்தில் குவிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்நடாத்தப்படும் போராட்டங்களில்  புலனாய்வாளர்களால்  அச்சுறுத்தல் என யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார்.
 

Recommended For You

About the Author: Editor Elukainews