அணுஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம்.

அணுஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியனுடனான அணுஆயுத சோதனை தொடர்பான பேச்சு வார்த்தைக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்துள்ளோம். நவம்பர் மாதம் இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் . அமெரிக்காவுடனான மறைமுகமான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்று தெசiவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே அப்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானி முயன்று வந்தார்.
இதற்கான வாய்ப்பு உருவாகி வந்த நிலையில், ஈரான் – அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும் சூழலை ஈரானின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள இப்ராஹிம் ரைசியும் முன்னெடுத்து வருகிறார்.
அனைத்து விதிமுறைக் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று ஜோ பைடன் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews