வெலிக்கடைக் கைதிகளின் போராட்டத்தால் ஒரு கோடி ரூபா நட்டம்!

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் சிலரின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக செப்பல் பிரிவின் கூரைக்கு விளைவிக்கப்பட்ட சேதத்தால் சுமார் ஒரு கோடி ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் பொறியியலாளர் பிரிவு தெரிவித்துள்ளது. பொருள் சேதத்தை விளைவித்தமை தொடர்பில் சிறைக் கைதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமாகக் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக்கைதிகளை, கூரையிலிருந்து கீழ் இறக்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 10 கைதிகள், தங்களின் தண்டனைக் காலத்தைக் குறைக்குமாறு வலியுறுத்தி வெலிக்கடை சிறைச்சாலையில் செப்பல் பிரிவின் கூரையின் மீது ஏறி உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews