சீனாவின் சிறு நகரங்களில் விண்ணைத் தொடும் கட்டடங்களுக்கு தடை.

சிறிய நகரங்களில் விண் தொடும் கட்டடங்களை கட்ட சீனா தடை விதித்துள்ளது. வெறும் தோற்றத்திற்காக மட்டும் கட்டப்படும் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்களில் 150 மீட்டரைவிட (492 அடி) உயரமான கட்டடங்களை கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் தொகையை விடவும் அதிகமாக உள்ள நகரங்களில் 250 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் கட்டடங்களைக் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 500 மீட்டர்களை விட உயரமான கட்டடங்களை கட்ட தடை உள்ளது.
சென்சென்னில் உள்ள 632 மீ ஷாங்காய் டவர் மற்றும் 599.1 மீ பீங் ஆன் ஃபைனான்ஸ் சென்டர் உட்பட உலகில் மிகவும் உயரமான கட்டடங்களில் சில சீனாவில் உள்ளன.
ஷாங்காய், சென்சென் போன்ற கூட்ட நெரிசலான நகரங்களில் உயரமான கட்டடங்களுக்குத் தேவை இருப்பினும், மற்ற நகரங்களில் நிலத்திற்கான தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கு பலவும் வெளிதோற்றத்திற்காக மட்டும் கட்டப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்ணைக் கவரும் கட்டடங்களை கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் உள்ளூர் கட்டுமான நிறுவனங்களை கண்டித்து, சீனா தொடர்ந்து விலையுர்ந்த தோற்றப்பொலிவுக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தாண்டின் தொடக்கத்தில், அந்நாட்டு அரசு ‘அழகற்ற கட்டடக்கலை’க்கு தடை விதித்தது.
“வரலாற்றில் தவறாக செல்லக்கூடிய சிலவற்றை உருவாக்குவதில் மக்கள் மிகவும் வேகமாகவும் கவலையற்றும் இருக்கும் நிலையி நாம் இருக்கிறோம்”, என்று ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிக்கையில் டோங்ஜி காலேஜ் ஆஃப் ஆர்கிடெக்சர் அண்ட் அர்பன் ப்ளானிங்கின் முதன்மை தலைவர் ஸ்ஹாங் ஷாங்வு தெரிவித்தார்.
“கட்டடங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்க தோற்றமாக இருக்க நினைக்கின்றனர். கட்டுமான நிறுவனங்களும் நகர திட்டங்களைச் செயல்படுத்துபவர்களும் மிகவும் புதுமையான வித்தியாசமான இருக்கும் வகையில் கட்டடங்களைக் கட்டுகின்றனர்”
வீட்டுவசதி மற்றும் நகர-கிராம வளர்ச்சி அமைச்சகம் செவ்வாய்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், மூன்று மில்லியனுக்கு குறைவான நகர்ப்புற மக்கள் தொகையுள்ள நகரங்களில் 150 மீட்டர்களை விட உயரமான கட்டடங்கள் கட்ட வேண்டுமெனில் சில விதிவிலக்குகளை தரலாம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், 250 மீட்டர்களுக்கு உயரமான கட்டடங்களை கட்டுவதற்கு இதுபோன்ற விதிவிலக்குகள் அளிக்கப்பட மாட்டாது. அதே போல், மூன்று மில்லியனுக்கும் அதிகமான நகர்ப்புற மக்கள்தொகை உள்ள நகரங்களில், சில சூழ்நிலைகளில் 250 மீட்டர்களை விட உயரமான கட்டடங்களை கட்ட அனுமதிக்கலாம். ஆனால், 500 மீட்டர்களுக்கு உயரமான கட்டடங்களை கட்ட கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை மீறி திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளிப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் பொறுப்பு ஏற்க வேண்டி இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விண் தொடும் கட்டடங்கள் வெறும் கண்கவர் வித்தை எனவும், இது தேவையில்லை என்றும் வைப்போ என்ற சீனாவின் சமூகவலைத்தளத்தில் இந்த அறிவிப்புகளுக்கு பலரும் ஒப்புதல் அளித்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews