அதிபர்,ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டம் முழங்காவில்……

அதிபர்,ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டமானது இன்று முழங்காவில் தேசிய பாடசாலை முன்பாக இடம்பெற்றது.

.

இலங்கை முழுவதும் 100நாட்களுக்கும் மேலாக இடம்பெற்று கொண்டிருக்கின்ற அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டமானது வடக்கிலும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றது.இதன்படியாக நேற்றைய தினம் பளை கோட்டக்கல்வி அலுவலகம் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது

.

இன்று (26) பூநகரி கோட்டக்கல்வியுடன் இணைந்து முழங்காவில் தேசிய பாடசாலை முன்பாக ஆசிரியர்கள்.அதிபர்கள்.ஆசிரிய ஆலோசகர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இப்போராட்டமானது பாடசாலை நிறைவடைந்ததின் பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் 1.30மணியளவில் பாடசாலை முன்பாக இடமபெற்றிருந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews