வவுனியா பல்கலைக்கழகத்தில் 600 மரக்கன்றுகள் நாட்டிவைப்பு…!

வவுனியா பல்கலைக்கழகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் (25) காலை இடம்பெற்றுள்ளது.

?

மாருதம் பசுமை இயக்கத்தின் 6வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாருதம் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் 600 மரக்கன்றுகள் நாட்டிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர, வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் நே.விஸ்ணுதாசன், வவுனியா பல்கலைக்கழகத்தின் வைத்தியர் ப. சத்தியலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் யோகராசா, மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக வளவாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தமை குறிப்பிடதக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews