பருத்தித்துறை மரக்கறி சந்தை அங்கும் இங்கும், தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாக தவிசாளர்..! (வீடியோ)

பருத்தித்துறை மரக்கறி சந்தை மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு இன்று அதிகாலையில் வர்த்தகர்களால் மாற்றப்பட்டுள்ளது.
நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் புகுந்தமை,  மரக்கறி விற்பனையில்  வீழ்ச்சி உட்பட பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டமையினாலேயே வியாபாரிகள் மரக்கறி சந்தையை அதிரடியாக வர்த்தகர்கள் நவீன சந்தை தொகுதிக்கு மாற்றியுள்ளனர்.
இதேவேளை சுமார் பத்து வரையான மரக்கறி வியாபாரிகள் புதிய கட்டத்தில் தமது வியாபராத்தை மேற்கொண்டிருந்தனர்.
பின்னணி
பருத்தித்துறை நகரசபையில் இரண்டு மாதத்திற்கு முன்னர் மேற்குறிப்பிட்ட புதிய சந்தை குறைபாடுகளை காரணம் காட்டியும், விற்பனை வீழ்ச்சி உட்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாகவும் புதிய சந்தையை மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு மாற்றுவதென சபையில் பரும்பாண்மை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும் சபை தீர்மானம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையால் இன்று தினம் அதிகாலையில் மரக்கறி வியாபாரிகள் தாமாகவே பழைய இடமான நவீன சந்தை தொகுதிக்கு மாற்றம் செய்திருந்தனர்.
நவீன சந்தை தொகுதிக்கு மீண்டும் மரக்கறி சந்தையை இடம் மாற்றுவதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சைக்கிள், ஊசி என்பன ஆதரவாக வாக்களித்து ஒருவாக்கு மேலதிகமாக தீர்மானம் நிறயவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews