றிசாட்டிற்க்கு பிணை, இறுக்கமான நிபந்தனை….!

– உயிர்த்த ஞாயிறு வழக்கு; ஹிஷாலினி வழக்குகள் இரண்டிலும் பிணை
– இறுக்கமாக பிணை நிபந்தனைகள் விதிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சிறுமி ஹிஷாலினி மரண வழக்கு ஆகிய இரு வழக்குகள் தொடர்பிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சுமார் 6 மாதங்களின் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (PTA) கீழ் தொடரப்பட்ட வழக்கு, இன்று கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவருக்கு பிணை வழங்க நீதவான் உத்தரவிட்டார்.

தலா ரூ. 50 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews