மினி சூறாவளியால் 16 வீடுகள் சேதம்.

புத்தளம், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இரண்டு கிராமங்களில், இன்று (11) பகல் வீசிய மினி சூறாவளி காரணமாக, 16 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று, ஆனமடுவ பிரதேச செயலாளர் தீபிகா சந்திரானி தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ தோனிகல, பரமாகந்த ஆகிய இரண்டு கிராமங்களிலேயே இந்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

மினிசூறாவளி காரணமாக வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளதுடன் வீட்டு வளாகங்களில் இருந்த பாரிய மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

இதன் காரணமாக வீடுகளிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பயன்தரும் மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews