3 ஆயிரம் கோடிக்கு இடிதாங்கி விற்று 100 கோடி தருவதாக கூறி பலரிடம் பல லட்சம் சுருட்டிய கும்பல்! சினிமா பாணியில் நடந்த துணிகர கொள்ளை.. |

3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இடிதாங்கி ஒன்றை வெளிநாட்டில் உள்ளவருக்கு விற்பனை செய்யப்போவதாகவும் விற்பனை செய்து வரும் பணத்தில் 100 கோடி தருவதாகவும் கூறி நபர் ஒருவரிடம் பல லட்சம் ரூபாய்களை சுருட்டிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உடுகமசூரியவுக்கு கிடைத்த தகவல் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு விசாரணைகளில் இந்த 9 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இவர்கள் கண்டி, கெக்கிராவை, மரதன்கடவலை, இரத்மலானை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய இரு வான்கள் மற்றும் ஒரு கார் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள நிலையில், கோடிக்கணக்கான மோசடி செய்யப்பட்ட பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நுவரெலியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த பண்டாரவின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதில் இலங்கையில் ஓரிடத்திலுள்ள இடி தாங்கி ஒன்றினை கொள்வனவு செய்ய பணம் தேவைப்படுவதாகவும், அந்த இடி தாங்கியை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்ற பின்னர் கிடைக்கும் பணத்தில் பாரிய தொகையை 

பிரதி இலாபமாக செலுத்த முடியும் எனவும் கூறி மோசடி ஒன்று முன்னெடுக்கப்படுவதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், இது குறித்த விசாரணைகளை நுவரெலியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ்,

வலய குற்ற விசாரணைப் பிரிவிடம் கையளித்துள்ளார். இதனையடுத்தே இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்தே இந்த ஒன்பது சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறுகையில், சந்தேக நபர்கள் அவர்களது கையடக்கத் தொலைபேசிகளில் இருந்த இடி தாங்கி ஒன்றின் படத்தைக் காட்டியே பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

உண்மையில் அவ்வாறு ஒரு இடி தாங்கி இலங்கையில் எங்கு இருக்கிறது என எவருக்கும் தெரியாது. எனினும் அந்த இடி தாங்கியை தற்போதும் உக்ரேனில் உள்ள ஒரு வாடிக்கையாளர் 30 ஆயிரம் கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக

சந்தேக நபர்கள் கூறியுள்ளனர். இவ்வாறான பின்னணியில், குறித்த இடி தாங்கியை, அது இருக்கும் இடத்திலிருந்து பெற ஒரு தொகை பணம் தேவைப்படுவதாக கூறி ஒருவரிடம் 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த பணத்தை வழங்கும் நபருக்கு, இடி தாங்கியை விற்ற பின்னர் 100 கோடி ரூபாவை தம்மால் பிரதி இலாபமாக செலுத்த முடியும் எனவும் சந்தேக நபர்கள் ஆசை வார்த்தைகளை கொட்டியே பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சட்டத்தரணியாக நடித்துள்ள ஒருவர், போலி சட்டத்தரணி முத்திரை ஒன்றினையும் தயார்படுத்தி, அதனை கொண்டு பணம் செலுத்தும் நபர்களுடன் போலி ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே குறித்த பண மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிக் கைது செய்யும் போது, அவர்கள் மோசடி செய்த ஒரு கோடியே 33 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பணம் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் 35 – 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. ‘ என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறினார். இந்நிலையில் கொடுக்கல் வங்கல் ஒன்றின் போது, பாரிய பணத் தொகை செலுத்துவதாக மக்களின் மனதில் ஆசை வார்த்தைகள் ஊடாக

நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்குவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews