கால்வாயில் விழுந்து குடும்பஸ்தர் சாவு.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்  பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கால்வாயில்  விழுத்து உயிரிழந்துள்ளார். 09.10.2021 நேன்றைய தினம் இரவு  வேலை முடித்து தனது வீட்டுக்குச்சென்று கொண்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்கள் தேடி வந்த நிலையில் 10.10.2021 இன்று மதியமளவில்  இறந்தநிலையில் பிரமந்தனாறு பிரதான கால்வாயில் இனங்கானப்பட்டதையடுத்து தருமபுரம்  பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலையடுத்து சம்பவம்  தொடர்பாக தருமபுரம்  பொலிசார்  மேலதிகவிசாரனைகளை  மேற்கொண்டுவருகின்றனர். உயிரிழந்த நபர் 51 வயதுடைய இராமலிங்கம் புஸ்பராஜ் எனும் 6 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  கிளிநொச்சி வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews