கிளிநொச்சி கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல்; ஒருவர் கைது – இரு வாள்கள் பறிமுதல்!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்த இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரவு குறித்த பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதாக பொலிஸாரின் அவசர சேவை இலக்கமான 119 இற்கு பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பிரதேசத்திற்கு விசாரணைக்காக சென்ற விசேட பொலிஸ் பிரிவினர் மீது வாள் வெட்டு வன்முறை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் 4 பொலிசார் காயமடைந்துள்ளதுடன் இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும். மேலும் இருவர் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews