தொலைக்காட்சி ஊடகவியலாளர் வீட்டின் வேலி தீக்கிரை….!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் (03) அன்று ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டு வேலி தீயூட்டி எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.சமீப காலமாகவே குறித்த ஊடகவியலாளருடன் சட்டத்திற்கு எதிராக செயற்படும் சிலரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்துள்ளது.

குறித்த ஊடகவியலாளர் மீது ஆதாரங்கள் இல்லாத பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு பின் குற்றமற்றவர் என பொலிசாரினால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவரை அவமானபடுத்தவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த ஊடகவியலாளர் தெரிவிக்கின்றார்.சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்தாலும் செய்திகள் வெளியிடுவதனாலும் இவ்வாறான செயற்பாடுகள் செய்து வருவதாகவும் மேலும் அவரது பிள்ளைகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தும் அவரது ஒன்றரை வயது குழந்தையை மோட்டார் சைக்கிளால் தாக்கவும் முற்பட்டுளள்ளனர்.கடந்த மாதங்களுக்கு முன் இவரது மகன் தாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குறித்த ஊடகவியலாளர் வீட்டிற்கு முன் நேற்று (03)மாலை விசமிகள் சிலரால் வன் சொற்கள் பயன்படுத்தி அச்சுறுத்தலும் விடுத்துச் சென்றுள்ளனர்.அதன் பின் குறித்த ஊடகவியலாளர் இது தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.இதன் பின் அன்றிரவு குறித்த ஊடகவியலாளர் உறக்கத்தில் இருந்த போது இனந்தெரியாத விசமிகளால் அவரது வீட்டு வேலிகள் தீயூட்டி எரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலதிக விசாரனைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews