வட்டுக்கோட்டை சந்தியில் விபத்து – முச்சக்கர வண்டி சாரதி தலையில் காயம்!

இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வட்டுக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணிகள் தனியார் போக்குவரத்து பேருந்து வட்டுக்கோட்டை சந்தியை கடக்க முற்பட்டது. இதன்போது அராலி தெற்கு பக்கத்தில் இருந்து வந்த, வெதுப்பக பொருட்கள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள வெற்றுக் காணியினுள் இருந்த கற்களின் மேல் பாய்ந்தது.
இதனால் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் பயணத்தை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கினர். வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews