பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கைது!

பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட மூவர் இந்திய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மும்பை கடற்கரையில் போதை ஒழிப்பு பொலிஸாரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைபற்றப்பட்டிருந்தது.
இதில், பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட 8 பேரிடம் இந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணை நடத்தப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளின் பின்னரே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், போதைப்பொருள் இடைத்தரகர்கள் முன்னிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த பொலிஸார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews