கலாச்சார மத்திய நிலையம் விரைவில் திறந்துவைக்கப்படும். ஐந்து வருட பராமரிப்பு செலவை இந்தியா பொறுப்பேற்கும்!

இந்திய அரசின் நிதிப் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலையமாக இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் வெகுவிரைவில் திறந்துவைக்கப்படவுள்ளது. எனஇந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார். யாழ்ப்பாண நகரின் மத்தியில் மிகப் பிரம்மாண்டமான மண்டபமாக இந்திய அரசின் நிதிப் பங்களிப்போடு இந்த கலாச்சார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது இந்த மத்திய நிலையமானது வெகு விரைவில் இலங்கை அரசின் பங்களிப்புடன் திறந்து வைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு திறந்து வைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு கட்டிடத்தின் பராமரிப்பு செலவினையும் இந்தியாவே பொறுப்பேற்க உள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அத்தோடு இலங்கைக்கு இந்தியா பல்வேறுபட்ட உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். இவர் நேற்று இலங்கைக்கு வருகை தந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை சுற்றி பார்வையிட்டார்.அவருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனும் வருகை தந்தார்.
அவரது வருகையை முன்னிட்டு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய வளாகத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews