கரந்தெனிய தல்கஹாவத்தை சிறுமி கொலை ‼️சந்தேகநபரான சிறுமியின் அத்தான் தலைமறைவு‼️

நேற்று (09) எல்பிட்டிய, தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

கரந்தெனிய தல்கஹாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஹன்சிகா நடிஷானி என்ற சிறுமியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சிறுமி தனது மூத்த சகோதரியின் கணவருடன் தொடர்பு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர் தனது சகோதரியின் இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக, சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது இந்த உறவு ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உறவின் காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 23ம் திகதி வீட்டுக்கு வந்த சிறுமியின் அத்தான் அவரை கடத்தி சென்றதாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அங்கு சில நாட்கள் தனது அத்தானுடன் வசித்து வந்த சிறுமி, அங்கு தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வலுக்கட்டாயமாக அத்தான் அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கூறியுள்ளார்.

அதன்படி பெற்றோர் அங்கு சென்று சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்தனர், பின்னர் மீண்டும் ஹன்சிகா வீட்டிற்கு வந்த அத்தான் அவரை அழைத்து சென்றார்.

கடந்த 5ம் திகதி தாயார் சென்று ஹன்சிகாவை வீட்டுக்கு அழைத்து வந்ததாக மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 6ஆம் திகதி நடந்த விசாரணைக்காக, ஹன்சிகா தனது தாயாருடன் முச்சக்கரவண்டியில் எல்பிட்டிய பொலிஸ் நிலையம் சென்றார்.

பொலிஸ் நிலையம் செல்லும் வழியில், மேலும் இருவருடன் வந்த அத்தான் ஹன்சிகாவை வலுக்கட்டாயமாக மற்றொரு முச்சக்கர வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, ஹன்சிகாவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்த நிலையில், புகார் அளித்த 24 மணி நேரத்தில், ஹன்சிகா கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

முதற்கட்ட விசாரணையில், வேறொரு இடத்தில் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்து, தேயிலை தோட்டத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கொல்லப்பட்ட ஹன்சிகாவின் அத்தான் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார், மேலும் அவரைக் கண்டுபிடிக்க போலீஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews