நண்பனின் 50 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட நபர்!

கொழும்பு ஹோட்டல் ஒன்றில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தனது நண்பரின் 50 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

கொள்ளுப்பிட்டியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வர்த்தகர் மது அருத்திய நிலையில், இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்ற முறைப்பாட்டாளரான வர்த்தகரும் அவரது நண்பரும் பாடசாலையில் இருந்தே நண்பர்களாக இருந்தவர்களாகும்.

வாகனம் ஒன்றை வாங்க வந்த இருவரும் ஹோட்டல் அறையில் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வர்த்தக நண்பர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தூங்கியதையடுத்து சந்தேகநபர் பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முறைப்பாடு செய்த வர்த்தகர் கஹவ பகுதியை சேர்ந்தவர் எனவும், தப்பிச் சென்ற சந்தேகநபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பணத்தை கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews