மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அதனை பாதுகாக்க வேண்டும்! ஜனாதிபதி

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், அதனை பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இதனைக் அவர் தெரிவித்தார்

அந்தவகையில் பெண்கள் மீதான பாகுபாட்டைத் தவிர்க்க, முதல் முறையாக தேசிய ஆண் மற்றும் பெண் பாலினக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயல் திட்டம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒட்டுமொத்த பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்

இதேவேளை, தற்போதைய சமூக நெருக்கடிகளின் மத்தியிலும் கூட, பெண்களின் போசனை, சுகாதாரம் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக பெண்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews