வெளிநாட்டு பெண்ணிடம் கைவரிசை – பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் 760,000 ரூபாய் பணம், இரண்டு ATM அட்டைகள் உள்ளிட்டவை சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹிக்கடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால்   071 – 8591457 மற்றும் 091 – 2277222 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews