*⭕வரலாற்றில் இன்று___MAR 01*

*⭕வரலாற்றில் இன்று___MAR 01*

1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.[1]
1910 – வாசிங்டனில் இடம்பெற்ற பனிச்சரிவில் கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.
1921 – வாரிக் ஆம்சுட்ரோங் தலைமையிலான ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி ஆஷசுத் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் முதல்தடவையாக வென்றது. இது போன்ற சாதனையை ஆத்திரேலியா 86 ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் சாதித்தது.
1936 – ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.
1939 – சப்பான் ஒசாக்காவில் இராணுவ வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா அச்சு நாடுகள் அணியில் இணைந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் சாவகத் தீவில் இறங்கினர்.
1946 – இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.
1948 – இலங்கையின் தெற்கே ஓமகமைக்கும் கொட்டாவைக்கும் இடையே இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 52 பேர் படுகாயமடைந்தனர்.[2]
1949 – இந்தோனேசிய இராணுவம் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுக்களிடம் இருந்து ஆறு மணி நேரம் கைப்பற்றி வைத்திருந்தது.
1953 – சோவியத் தலைவர் சோசப் சுடாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.
1954 – அணுகுண்டு சோதனை: காசில் பிராவோ என்ற ஐதரசன் குண்டு பசிபிக் பெருங்கடலில் பிக்கினி திட்டில் வெடிக்கவைக்கப்பட்டதில் கதிரியக்க மாசு அமெரிக்காவில் ஏற்பட்டது.
1954 – ஐக்கிய அமெரிக்க காங்கிரசு மாளிகை மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரசு உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
1956 – பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் ஒலியன்களின் அகரவரிசைக்கான நகல் வடிவை பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்புக்காகத் தயாரித்தது.
1956 – கிழக்கு செருமனியின் தேசிய மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
1961 – உகாண்டா சுயாட்சி பெற்று முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன.
1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1971 – பாக்கித்தான் அரசுத்தலைவர் யாகியா கான் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்களைக் காலவரையறையின்றி ஒத்திவைத்தார். கிழக்குப் பாக்கித்தானில் பெரும் மக்கள் கலவரம் வெடித்தது.
1973 – சூடானில் சவுதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.
1977 – சார்லி சாப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
1980 – சனி கோளின் யானுசு என்ற சந்திரன் இருப்பதை வொயேசர் 1 விண்கலம் உறுதி செய்தது.
1981 – ஐரியக் குடியரசுப் படை உறுப்பினர் பொபி சான்சு வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1991 – சதாம் உசைனுக்கு எதிரான கிளர்ச்சிகள் ஈராக்கில் ஆரம்பமாயின.
1992 – பொசுனியா எர்செகோவினா இயுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1995 – யாகூ! ஆரம்பிக்கப்பட்டது.
2003 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை டென் ஆக்கில் நடத்தியது.
2006 – ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.
2007 – ஐக்கிய அமெரிக்காவின் தெற்கே சுழல் காற்று தாக்கியதில் 20 பேர் வரை உயிரிழந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews