அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்புகளில் 20 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு மதுபான சுற்றிவளைப்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 68 லீற்றர் மதுபானம், ஒரு எரிவாயு சிலிண்டர், ஒரு எரிவாயு அடுப்பு, செப்புத் தகடு என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்குளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், 3 கிராம் ஹெரோயின், 1 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பவற்றுடன் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபுவாவ வீதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 330 லீற்றர் மதுபானம், 1660 லீற்றர் கோடா, 06 செப்புத் தகடு, எரிவாயு சிலிண்டர்கள் 05, எரிவாயு அடுப்பு ஒன்று, 14 பீப்பாய்கள் என்பவற்றுடன் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 25, 34 வயதுகளையுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தந்திரிமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், அனுமதிப்பத்திரமின்றி 215 கிலோகிராம் 324 கிராம் கொத்தலாம்பட்டையை தன்வசம் வைத்திருந்த தந்திரிமலை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ அத்தனகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கூரிய ஆயுதங்கள் பலவற்றுடன் 21, 22 மற்றும் 24 வயதுகளையுடைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹொரன, பியகம, பொரளை, ஜாஎல, கந்தர, கதிர்காமம், வெயாங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் 25 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோய்ன் என்பவற்றுடன் 22, 24 , 25, 39, 35 வயதுகளையுடையே ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்தடன் குறித்த பிரதேசங்களில் 88 லீற்றர் மதுபானம் 717 லீற்றர் கோடா என்பவற்றுடன் 41, 50, 55 வயதுகளையுடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாணம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்திவந்தவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடதலாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 12 துளைகளைக் கொண்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. படல்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிமுல்ல, கரதகம பிரதேசத்தில் 32 மரக்குற்றிகளுடன் படல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews